இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday 9 December 2012

என் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டு .

உன்கண்களை ...
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .

காதலில்  வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து  கொண்டே
வருகிறது .

கருக்கொண்ட  மேகம்
போல்... என்கண்கள்
காதலை  காட்டிக்
கொடுத்துவிடுமோ
என  அச்சப்படுகிறேன் .

என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .

நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .

அப்போதுதான் ...நீ ...

என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .

நம் வாழ்வில்
மலரைவிட  மென்மையாகவே
உன்னுடனான  தொடர்புகள்
இருக்கும் .

உன் வெற்றியின்
பாதை  நோக்கியே
என்னுள்ளம்
இனி  சிந்திக்கும் .

உனது ...
வெற்றியின்  உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும்  உழைக்கும் .

உனதான ...
வலிகளை  இனி
என்னிடம்  சேர்த்துவிடு
இன்பங்களை  மட்டுமே
அணிந்துகொள் .

இப்போதெல்லாம் ...
உன்நினைவு  தரும்
சுகத்திற்காகவே  நான்
தனிமையை
விரும்புகிறேன்.

இரும்பு  இதயமா
உனக்கு ? என்
காதலை  ஏற்ப்பதில்
என்னதயக்கம் .

நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த  சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என  அச்சப்படலாம் .

காந்த  விசை
போன்றதான
என்  காதலுக்கு
பச்சைக்  கொடிகாட்டு . 

     இந்த  கவிதை கூட ஒரு விதத்தில்  நம்பிக்கை  துரோகம்  இழைத்து  விட்டதுதான் . காரணம்  இது நமது கவிதை  இல்லை . நம்பிக்கையோடு  படிக்க  கொடுத்ததை  பதிவேற்றம்  செய்துவிட்டேன் .

பொறுத்துக்  கொள்வீர்கள்
என்ற  நம்பிக்கையுடன் ...
மாலதி .

Thursday 6 December 2012

உடலும் உள்ளமும் உறுதிபெற ...

ஆதவக்குளியல்  ஒரு
சுகம் தான் .

சுற்றும் நிலவும்
இனிமைதான் .

இயற்க்கை மலைகள் ...

இனிமையாய்
கொட்டும்  அருவி ...

பற்றிப்படர்ந்திரும்
கொடிகள் ...

பார்க்கத் தூண்டும்
மலர்கள்...

விண்ணைத் தொடும்
 மரங்கள் ...

பச்சைவண்ண
புல்வெளிகள் ....

கண்ணைக் கவரும்
பனி தூவல் ....

பகலவன்
உதிக்கும் காலையும்....

கொட்டித்தீர்க்கும்
மழையும்  தான் ...

இனிமையாய் தொட்டுச்
செல்லும் தென்றலும்தான் ...

இவைகள்  ....
இயற்க்கைவரைந்த
காவியங்கள்
கனவுகள்  வளர்க்கும்
சூழல்கள் ....

உடலும் உள்ளமும்
உறுதிபெற
இவைகள்  வேண்டும்
தலைப்பைச் சேருங்கள்


நம்  வாழ்வில் .



Saturday 1 December 2012

விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .

 கல் நெஞ்சக்காரனே ...
அத்தனை  இரும்பு
இதயமா உனக்கு?

எத்தனை  தடவை
கேட்டேன்...
இதயம் திறந்து
காட்டினேன்
புரியவில்லையா ?
நடிக்கிறாயா?

என்
கனவுக் கோட்டைகளை
சிதைக்க  முயலுகிறாய்.

பெண்மையின்

மென்மையையும்
அதன் மௌனத்தின்
வலியையும்
புரிந்து கொள்ளாதவன்  நீ.

வலிய வந்து
கேட்டதால்
வலிமையற்றவள்  அல்ல
நான் .

உன் ....
கோட்டைக்குள்
குடிபுக  தகுதியற்றவளும்
அல்ல நான் .

விழிமூடி
மௌவுனிப்பதை
உடைத்தெறி ....
கண்  திறந்து
பார் ....
உனக்கான
வசந்த
வாசல் திறந்து
காத்திருக்கிறது .

விதை  தூவு ....
விருட்சமாக
தொற்றங் கொள் .

அன்புடன் ....
உன் மாலதி

Wednesday 21 November 2012

உன் நினைவு தரும் சுகத்தால்

 உன்  கலப்படம்
இல்லாத சொற்களால்
கவரப்படுகிறேன் .

உன் உயர்ந்த சிந்தனையால்
ஊட்டம் பெறுகிறேன் .

உன்...
தொலைநோக்குத்
திட்டங்களால்
வியந்து போகிறேன் .

உன் மாசற்ற
பார்வையால்
மயங்கிப்போகிறேன் .


உன் நடிப்பற்ற
செயல்களால்
பூரிப்படைகிறேன் .

உன் வசீகரிக்கும்
நடத்தை முறைகளால்
உலகையே  மறந்து
போகிறேன் .

கண்கள் ஓயும்வரை
உன்னைப் பார்த்துச்
சுவைக்கிறேன்  .


உன் நினைவு
தரும்  சுகத்தால்
வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன் .


 என்றும் தமிழன்புடன்....
         மாலதி. 

Tuesday 6 November 2012

அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .

என் உள்ளத்திலுள்ள
வேட்கைபோலவே
உன்வரவின்
நாள் நெருங்குவதாய்
ஏதோ  உள்ளுணர்வு
சொல்லுகிறது .

உன் எக்குருதியான
தோள்களைத்
தழுவிட
உடல்  ஏங்குகிறது .

காவியங்களை
மிஞ்சும் காதல்
மொழிகளை
பேசிட  உதடுகள்
துடிக்கிறது .

ஆசைதீர
உன்  எழிலை
பருகிட  கண்கள்
ஆவல் கொள்ளுகிறது

உன் ...
நெருக்கத்தை
சுவைத்திட
என்மேனி
பசலை  பூக்கிறது.

இருப்பினும்
பண்பாடு என்னைத்
தடுக்கிறது .

அன்பனே ...
விரைந்து
மங்கள  நாண்
கொண்டுவா .

Tuesday 9 October 2012

எனக்குப் பொருத்தமானவனும் நீ.




ஆண் ,பெண்  இனபேதம்
பார்க்காதவன்  நீ.

இயற்கையின்  படைப்பில்
அனைவரும் சமம்
என்கிறவன் நீ.

சாபங்களும்
சாபவிமோசனங்களும்
மனிதத்தை
முடமாக்குவன
என்கிறவன்  நீ.

கருத்தியலை
அழித்தொழித்து
பொருளியலை
முன்னெடுக்கிரவன்  நீ .

போர்க்குணம்

நிறைந்தவன்  நீ.

எனக்குப்
பொருத்தமானவனும் நீ.
 

Sunday 19 August 2012

தமிழனே இப்படித்தானோ



கடவுள்  மறுப்பை
கட்டுமிரண்டித்தனாமாய் ...
அறிவியலை  புரிந்து கொள்ளாத
கண்மூடித்தனத்தோடு .

எப்போது புரிந்து கொள்வாய்
தமிழனே .
கடவுள் மறுப்பு என்பது
எப்படி...  ஏன்...
என அறிவியல்
நுட்பத்தோடு ...
நீ ...
மறுத்தளிக்க
வேண்டும்  கடவுள்
இல்லை கடவுள் இல்லை
இல்லவே  இல்லை
என்பது எப்படி
அறிவும்  அறிவியலும் ஆகும் ?

பெரியார்  ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு  படுத்தியதும்
முடமாக்கியதும் .

பழமை
அறிவியாலை  உள்ளடக்கியது
யோகமும்
சாங்கியமும்
உலகாயதமும்
உள்ளடங்கியதுதான்
வள்ளுவரின்  திருக்குறள் .
எவனாவது  மறுதலிக்க இயலுமா ?

கடவுள்  எப்படி
எதற்காக படைக்கப்
பட்டர்  என்பதை
அறிவியல்  நுட்பத்தோடு
புரிய  வைக்க வேண்டாவா ?

சடங்குகளும்
சில  அறிவியல் நுட்பம் வாய்ந்தவை
இதை  புரிந்து
கொள்ளவில்லை
என்றால்  எதையும்
முழுமையாக
புரிந்து கொள்ள இயலாதே .

காட்டு  மிராண்டியாய் 
இருந்து விடாதே
விழி ...
ஏழு ...
பார் ...
உலகை  நோக்கு
வெற்றியை  கைது  செய் .

அறிவியல் சில சமயம்
ஆன்மீகமாக
தோற்றம் கொண்டு
இருக்கும்
அறிவைதிரட்டி
புரிந்து கொள்ள முயல்
காட்டுமிராண்டியாக
மறுதலித்து
முடங்கிப் போகாதே .

அறிவியலை
ஆன்மீகமென  எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் .

சான்றைத்  தேடி
அறிவியலை  பரப்புரை
செய் .

சிந்திப்பாய்
தமிழனே .




Monday 6 August 2012

சாவைத்தழுவா விடியலைத்தேடுகிறேன்



எந்த மை கொண்டு
எழுதப்  பட்டதென
புரியவில்லை
அழிய மறுக்கிறது
இதயதிலுன் பெயர் .

கண் மூடித்தனங்கலோடில்லை
கட்டுப் பாடுகளுடன்
சிந்தித்தேன் ...
வளம்  கொழிக்காவிட்டாலும்
கேடுகள்
நிகழ  வாய்ப்பே
இல்லை .
நமக்கான சிறகுவிரித்தலில் .

உனதான
பாதைகள்  என்
வாழ்க்கைக்கு
வலு  சேர்க்கிறது .

சிதறிக்  கிடக்கும்
உன் சிந்தனைக்  களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது .

உனதான
வாழ்வியல்
விளக்கங்கள்
என்னை
வசீகரிக்கிறது .

எதிர்  நீச்சல்
அல்ல...
இலக்கணமாய்
உன் பதிவுகள் .

உன் ...
சகாப்த்தத்தில்
நானும் சாவைத்தழுவா
விடியலைத்  தேடுகிறேன் .

                 -  தமிழன்புடன்  மாலதி

Thursday 19 July 2012

உன் முரட்டுக் கரம் தா



வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .

கடலலையாய்
உள்ளம்  அலைபாய்கிறது .

என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .

துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக  இயலாது
வெடித்துக்  கதறுகிறேன் .

நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .

திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக்  கரம்  தா .




Friday 6 July 2012

மறத்தின் துணைக் கொண்டு அறத்தை வென்றெடுக்க

காகிதபூ அணிவதில்லை நீ
என்றாய் .

காரல் மார்க்ஸ் சே
வியத்தகு  தலைவர்என்றாய்.

சாதிகள்  அழிய
வேண்டுமெண்றாய் .

சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.

உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.

அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.

Saturday 16 June 2012

13 .06 .2006



எல்லோருக்கும்
இயல்பாய்  விடிந்தது ...
எனக்குமட்டும்
புதுமையாய் பிறந்தது .

படிக்க வந்தேனா ....
படிப்பிக்க  வந்தேனா....
ஆயிரம்  ஐயங்கள்முன்னுள்.

நம்மிடையிலான  தொடர்புகள் ...
அன்றே  தோற்றங்க்கொண்டது.

வழமையான உன் ...
வெளிப்படையான
பேச்சை  சுவைப்பவள்  நான் .

கேட்டே வைத்தாய் ...
படிக்க வந்தாயா?
படிப்பிக்க  வந்தாயா?

என்பதிலே ...
உன்னை  மகிழ்வித்தத்து .

விடுமுறை  நாளில்
இருப்பை  விதவிதாமாய்
காட்டிக் கொண்டோம்.

கண்களில் காதலை
கடன் பெற்றோம் .

இதயத்தில் இடம்வாங்கி
குடியமர்ந்தோம்.

இன்றுவரை...
இணையாத  இருப்புப்
பாதையென ....

உன்னினைவோடு ...
தொடர்கிறதென்  பயணம்.

Monday 11 June 2012

கலப்புத் திருமணத்தை எதிர்ப்போம் ...



பன்றிகளுக்கும்
நாய்களுக்கும் ....
கழுதைகளுக்கும் ....
குதிரைகளுக்கும் ....
கோட்டான்களுக்கும் ...
மாடுகளுக்கும் ...
மனிதர்களுக்கும் ...
இடையிலான கலப்புத்
திருமணத்தை
தடுத்து  நிறுத்துவோம் .

இந்த  முறைமீறிய
திருமணம்  இங்கு
தேவையில்லை ...

தூய  மனிதத்திற்க்குள்ளே...
சமயங்க லேது ...
சாதி  தானேது ....
ஏற்றத்  தாழ்வுதான்
எது ?

Sunday 3 June 2012

ஐந்தாம் பொருத்தம்

ஐந்தாம் பொருத்தம்

எல்லோரும்  ஐந்தாம்
பொருத்தத்தை  சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது  அதைத் 
தட்டிக்கழித்தவன்  நீ .

நம்  இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை  நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம் 
செய்கின்றவன்  நீ.

வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள்  போல
சேமிகிறவன்  நீ .

என் காதலும்  நீ .

காவிய
நாயகனும்  நீ .


 
ஐந்தாம் பொருத்தம்  யோனி பொருத்தம்  என்பது  தெரியாதா  என்ன  உங்களுக்கு ...



Wednesday 23 May 2012

ஆனந்தக் காதலில் ... மூழ்கித் திளைக்கிறேன்.



நமக்கான  காதல்
தோற்றுவாய் ...
கரும்புத்  தோட்டம் ...
கால்வாய்.....
கோவில் ... குளம் ...
என ஊர்புற  காதலாகவும்

கடற்கரை ... பேருந்து...
வெளிச்சம்  குறைந்த
பட்டணத்துப் பொலிகாளைகள்
நாய்போலகூடித்  தழுவும்
நட்சத்திர  விடுதிகளுமில்லை.

காபிஷாப்  ஷாப்பிங் மால்
மல்டி பிளக்ஸ்  இணையம்
மூஞ்சிப்  புத்தகம்
என திரிந்து கிடக்கவுமில்லை.

கட்டான உடலைக்
கண்டு காதலிக்கவுமில்லை

வட்டநிலா போன்ற
மூஞ்சியைக்  கண்டு
காமுறவுமில்லை.

பகட்டான  வாழ்க்கைக்கு
பணத்திற்கு...
நாம் காதலிக்கவில்லை.

தெளிவான  பார்வை
தேர்ந்த  அறிவு ...
உனக்குமிருந்தத்து ...
எனக்குமிருந்தத்து .

தமிழரின்
உயரிய நூல்
தொல்காப்பியம் போல
காதலுக்கான  இலக்கணங்களை
முரண்படா விதிகளுடன்
கட்டமைத்தாய்.

அந்தக்  காதலில்
இழுக்கப்  பட்டேன்
அந்த  ஆனந்தக்
காதலில் ...
மூழ்கித்  திளைக்கிறேன்.

   

Monday 14 May 2012

நாங்கள் தமிழர்கள்



நாங்கள்  சந்தனத்திற்கும் 
சாக்கடைக்குமான 
வேறுபாட்டை  அறியாதவர்கள் .

போலிகளுக்கு  புகழ் 
மாலை சூட்டி 
மகிழுகிறவர்கள்.

நேர்மையை  புதைத்துவிட்டு 
அவலங்களை 
அரங்கேற்றம்  செய்கிறவர்கள்.

புதையலை  ஒதுக்கிவிட்டு 
பொய்களை  தேடிக்கொண்டு 
இருப்பவர்கள் .

தத்துவங்களைத்  தவறவிட்டு 
சதிகளுக்கு   ஆளாகிக் 
கொண்டு இருப்பவர்கள்.

சாதியால்   
சண்டையிட்டு 
சங்கடங்களை  ...
விலை  பேசுகிறவர்கள் .
நாங்கள்  தமிழ் நாட்டுத் 
தமிழர்கள் .

தமிழன்  எப்போதுதான்   விழிப்பனோ?

Saturday 5 May 2012

நானும் ஒருத்தி என்பதாலா அன்பனே .....

 சாதிகளைச் சொல்லி
சலுகைக்காக
 வேட்கைகொள்ளுகிறவன்  இல்லை .

சாயம் போன
அரசியல்  பிழைப்பாளியும் இல்லை  நீ .

வீணான கருத்தியல் பேசி
மக்களை  கவிழ்ப்பவனும்  இல்லை .

அறம் சார்ந்த பொருளியல்
பேசுகிறாய்.

குமுகப்  பாமரத் தனங்களை
உடைத்தெறிய
களமாடுகிறாய்.

கட்டவிழ்த்து  விடப்பட்ட
காட்டுமிராண்டித் தனங்களை
முடமாக்க  எண்ணுகிறாய்.

யாதும் ஊரே
யாவாரும் கேளீர்  என
தமிழ்  சித்தாந்தத்தை
முன்னெடுக்கிறாய்.

இருத்தலை உடைத்தெறிகிறாய்.
புதியன  பதியமிடு கிறாய்.

கற்றதைக்  கற்பிக்கிறாய்.
புதியன  கற்றுக்கோள்ளுகிறாய் .

பறந்துப் பட்ட மக்களின்
நலனையே எல்லோரின்
பார்வைக்கும் வைக்கிறாய் .

அதில்  நானும்  ஒருத்தி
என்பதாலா     அன்பனே .




Monday 16 April 2012

நான் கற்றுத்தேறிய கல்லூரியும் நீ நீ ... நீயே .

பிழையான  கற்ப்பிதங்களை
கொள்கிறவன் அல்லன் நீ .

காதலில்  நேர்மையான

கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .

இருவருக்குமான

முழுமையான புரிதலில் 
தேறியபிறகே
காதலில்  தடம்
பதிய  வேண்டும்  என்கிறவன் நீ .

புரிதல் உடலில்  இருந்தல்ல

உள்ளத்தில்  இருந்தான
வேட்கை  கொள்ள வேண்டும்
என்கிறாய்.

கண்டதும்  காதல்

என்ற   காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .

புரிதலுக்கு  பிறகேயான

பிரிதலையும்
சாடுகிறவன்    நீ.

நான்  கற்றுத்தேறிய

கல்லூரியும்  நீ
நீ ... நீயே .

Monday 9 April 2012

காதலில் பழங்கால பெண்கள்


 பழங்கால  பெண்கள்
காதலைக் 
கண்மூடித்தனமாய்
அணுகவில்லை .

கல்வி கற்றவனாக ...
வீரனாக ....
நேர்மையன  வனாக...
வளப்பம் நிறைந்த
நாட்டவனாக...
இப்படி  காதலனின்
உண்மை 
நம்பகத்தன்மைகளை
அறிந்தே  காதலில்
வீழ்ந்தனர்
காதலனை  வீழ்த்தினார்.

காதலில் அப்போது
உறுதியும்  இருந்தது .
நேர்மையும்  பிறந்தது
இல்லறமும்  நல்லறமே
மாறியது .

இன்றோ ...
உள்ளத்தைக்  கணக்கில்
கொள்ளாமல்
கள்ளத்தை  உள்ளத்திலேந்தி
உடலை  இலக்காய்
கொண்டு
பொன்னே...
தேனே  என வழிந்து....
விரைந்து  திகட்டிப் போய்
சீரழிகின்றனர் .

விட்டுக் கொடுத்து
வாழ்வோம் .
தட்டிக் கொடுத்து
தேற்றுவோம்.
தமிழ்
பாரம்பரியத்தை
பண்பாட்டைக் காப்போம்.
மீட்ப்போம்.

Saturday 24 March 2012

இன்றைய உலகம் ....

விழி  இழந்த ஒருவனுக்கு 
இருளும்  ஒன்றுதான் 
ஆயிரம்  வண்ண 
விளக்குகளும்  ஒன்றுதான்.


இன்று ...
அறிவைச்  சொன்னாலும் 
ஏற்க்காமைக்கு  காரணமும் 
இதுதான்.

எளிமையான 
உணவுகளையே  உண்டு 
பழகியவனுக்கு 
சற்று  கடினமான 
உணவுகள்  செரிக்கவா 
செய்யும்  கழிச்சல்தான் 
காணும் .

அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும் 
கற்றுக்    கொள்கிறவர்களும் 
மிகவும்  குறைவே .

முடைநாற்றம்  வீசும் 
கண்மூடித்  தனங்கள் 
காட்டுத்தீயாய்
பரவி  அழிக்கும் .


அறிவோ  நொண்டி 
வண்டியில்  பயணிக்கும் 
உலகிது .


வழிகாட்ட  வந்தவரையே 
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும்  பார்க்கும்.

தெளிந்த  அறிவு 
முதற்க்கண்  பண்படவேண்டும்.
பின்னர் 
பண்படுத்தத்   தொடங்க 
வேண்டும்.

பாலை 
நிலத்தையும் 
சோலையாக்கிக் காட்டலாம் 
என்பதே  என்எண்ணம் .

அறிவைப்  புகட்டுவதும் 
புகட்ட  எண்ணுவதும் 
இத்தன்மைதே .
           
   



             இன்றைய நிலையில்  நேர்மையாக  இருப்பவர்கள்  அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே  கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள்  நான்உண்மையானவன்  நேர்மையானவன்  கதாநாயகத்( hero )தன்மை  கொண்டவனாக  நான் உண்மையுடன் இருப்பேன்   என ஏன்நினைப்பதில்லை  அப்படி நேர்மையனவனவனைப்  பற்றி  எழுதினால்  வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள்  நானும் அப்படித்தான் என  ஏன்  சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில்  அளிப்பீராக .
                                                                                  தமிழன்புடன்  மாலதி .  

Saturday 17 March 2012

நீங்கள் யார் ?


தீமைகளை எதிர்த்தான 
நல்லவர்களின்  கைக்கோர்த்தலும்
ஒற்றுமையின்மையும்  தான் 
அறம்(நீதி ) அழிவதற்கு 
மூகமையான காரணம் .

எய்ச்சுகிறவன் இருவர் 
பாதிக்கப் படுவது  
பலர்  கோழைத்தனம் 
தானே  எதிர்க்கமை?

தீயவர்களின் 
தீமையால் அல்ல 
நல்லவர்களின் 
கோழைத்தனத்தால்  தானே 
அறம்  விலைபேசப்
படுகிறது ?

நல்லவனாக.....
கோழையாக ...

வாழ்வதைவிட  
வீரனாக  வாழ்வதே 
நாட்டுக்கும்  நல்லது 
வீட்டுக்கும்  ஏற்றது .

தீயதை ஒன்றுகூடி 
எதிர்ப்போம் 
நல்லதை  பாராட்டி
மகிழ்வோம் .

Saturday 10 March 2012

உன்னைத் தொடர்வதேன்?





எவைஎல்லாம்நோவைத்தருமோ 
அவற்றை  எல்லாம் 
தொடுவதுமில்லை 
தொடர்வதுமில்லை  நீ .

எதுஎல்லாம்
இந்த  குமுகத்தை 
சீரழிக்குமோ 
அவற்றை எல்லாம்  
எதிர்ப்பவன்  நீ .

தன்னலத்தைப் 
புறந்தள்ளி 
பொதுநலத்தை 
முன்னெடுக்கிறவன் நீ.

முறையான  கல்விதான் 
கண்ணீரை விரட்டும் 
"மா" மருந்து என்கிறாய் .

அதனால்தான் -உன் 
பாதம் 
காட்டும் பாதையை 
தொடர்கிறேன்  அன்பனே .  

Saturday 3 March 2012

நான் யார் ?



இங்கு ...
குறிப்பாக தமிழகத்தில்
நடக்கும்  தவறுகளை
சுட்டிக்காட்டுகிறேன்.

இனவாதம்
பேசவில்லை
தமிழர் நலன்
பேசுகிறேன்.

தமிழரின்  கலைகளை
போற்றுகிறேன் ...
பின்பற்றுகிறேன் ...
வணங்குகிறேன் ...
அறிமுகப் படுத்துகிறேன்
தொடரக்  கோருகிறேன் .

அரசாக  இருந்தாலும்
இல்லாத ...
ஆண்டவனாக இருந்தாலும்
செய்வது  பிழைஎனத்
தெரிந்தால்
குன்றின் மீதேறி
குற்றம்  சாட்டுகிக்றேன்.

என்  அகவையையொத்த
இளைய  சமூகத்திற்கு
நல்வழிக்  காட்டுகிறேன்.

ஆண்தான்  அரசியலும்
வீரமும்  பேசவேண்டுமா
என்ன?

பாண்டிய மன்னன்
அவைக்களத்தில்  


தேராமன்னா !
செப்புவது  ஒன்றுடையேன்
என்றாளே என்  தமிழன்னை 
கண்ணகி  பெண்தானே ? 


போற்றுவோர்  போற்றட்டும் 
புழுதிவாரி  தூற்றுவோர் 
தூற்றட்டும்.


என் கடன் 
பணி செய்து கிடப்பதே.

   தமிழன்புடன்  உங்கள்  மாலதி .

 

   

Saturday 25 February 2012

கொலையா கற்பிக்கிறாய் ?



கூட்டுக்குடும்ப வாழ்கை
முறையை  முன்னெடுப்போம் .

முற்றாய்  இன்றையசிக்கலை
இனங்கண்டு  தட்டித்
துரத்துவோம்.

அடிமைமுறைக்  கல்விஇது
அதனால்  ஆளையேகொல்லுது
ஆசிரியையே  வெட்டி  சாய்க்குது .

பாழும் பணத்தின்
ஆசையால் ...
பதவிகளின் தாகத்தால் ...
குடும்ப  உறவகளே
சுமையாய்  மாறுது
பண்பட  வேண்டியவனை
பாடாய் படுத்துத்து .

கல்விக்கூடத்தில்
கத்தியை  பாய்சுது .

பள்ளிப் படிப்பே
சுமையை  தருகுது
சுமையாய் மாறுது.

பதவிகளின்  கனவே
இலக்காய் தொடருது .

அன்பை நாளும்
வளர்த்தோமில்லை.

பண்பைச்  சொல்லி
பழக்கிநோமில்லை .

பணம்தான்  மனிதத்தை
சிதைக்குது ...
அந்த  பணமே
மனிதனைக்  கொல்லுது .

மனிதமே  நீ ...
என்றுதான்  மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?

Saturday 18 February 2012

கோழையல்ல தமிழன்

 

நாங்கள்   தமிழர்கள்
சிற்றின  சிறுமதி
சிங்களன்  சுடுகிறான்
கேரளன்  அடிக்கிறான்
கன்னடன்  துரத்துகிறான் .
ஆந்திரம்  ஏய்க்கிறது
எங்கிருந்தோ  வந்த
இத்தாலி  வணிகக்கக்
கப்பலில்  வந்தவன்கூட
எங்கள்  மீனவர்கள் 
இருவரைக்  சுட்டுக்கொன்றான்  .

அட  பேடி  நாய்களே !

அட  பேடி  நாய்களே !

ஆயுதமின்றி
  எங்கள்தமிழரிடம்
நேருக்கு  நேரே
மோதத் தயாரா ?.

கொட்டக் ...

கொட்டக் ...
மண்புழுகூட  
""மா ""    வீரனாகும். .

உங்கள்வீட்டுப்

பெண்களின்  தாலியைப்பறிக்கும்
எச்சரிக்கை.   


       பொறுத்தருள்க  நமது இடுகையில் வேறு ஒரு  இடுகை  எப்படியோ  வந்து வெளியாகி இருந்தது  அதற்க்கு பின்னூட்டம்  இட்டவர்களுக்கு  பணிவான நன்றியும்  பாராட்டுகளும்  இது எப்படி நேர்ந்தது என  புரியவில்லை  சிரமத்திற்கு பொறுத்தருள்க. 

Monday 13 February 2012

காதலர்  நாள் 
கற்கவேண்டிய அகவையில் 
கல்வி கற்காமல் 
காதலில்  வீழ்ந்து 
வெம்மியும் போகவைக்கிறது .

முறையான அகவையில் 
பொருட் காரணங்களுக்காய் 
வாழ்வு கிட்டாமல் 
விம்மவும்  செய்கிறது.

இது 
தனியுடமைக்  குமுகம்.
"தானே " போல 
விரைந்து  வந்து 
அழிந்தும்  போகிறது 
அழிக்கவும்  செய்கிறது.

உடல்மட்டும்   இணைவதல்ல
உள்ளமும்  கூடவே 
கள்ளமும் இன்றி 
பள்ளமும்  நீக்கி 
சங்க  மிப்பது
உயிர்ப்பான  காதல்.

உடலால்  வருவது காமம் 
உள்ளத்தால்  இணைவதுகாதல்.
இது  கம்பன் .

அழியாக் காதலில் 
பொருளோ 
இனக்கவற்சியோ
முதன்மை  வகிப்பதில்லை.

விரைந்தொட்டும் பசைபோன்ற 
இனக்கவர்ச்சியை  இனங்காண்போம் 
உண்மைக்காதலை 
கற்றுக்  கொள்வோம் 
கற்றுக் கொடுப்போம் .

நேர்மைக் காதல் 
வெல்லட்டும் . 

            தமிழன்புடன் ....... உங்கள் மாலதி .

       இராஜஇராஜேஸ்வரி  அவர்கள் நமக்கு   தொடர்  வரிசையில் விருது வழங்கியுள்ளார்  அவருக்கு எமது பணிவான நன்றியும் பாராட்டுகளும் .
நானும்  தொடர்  விருதிற்கு ...

1  தீதும்  நன்றும்  இரமணி  ஐயா
2 . புலவர்  ஐயா  அவர்கள் .www.pulavarkural.info
3 வசந்த மண்டபம்  மகேந்திரன்  அவர்கள் .
4 கவியழகன் அவர்கள் .www.kavikilavan.blogspot.in
5  மனவிழி சத்ரியன்          அவர்களுக்கு  விருதுகளை வழங்கி  தொடர்  விருதிற்கு  அழைக்கிறேன் .

மேலும் கூட்டுதல் விவரங்கள்  அடுத்த இடுகையில் .


 

Saturday 4 February 2012

சா.... தி .....


சாதீயத்தை ....
வெட்டிச்  சாய்ப்பதாலும் 
சமத்துவம்  வென்றெடுக்கப்படும்என்கிறாய் .

பண்பாட்டைப் பேணுவாதல்- நம் 
பாதைகள்  நேராகும்என்கிறாய் .

பகைவனை  யல்ல
பகைமையை 
அழித்த்டுக்க -நாம் 
பண்பட்டு உயர்வோம் 
என்கிறாய்.

உன் ...
பார்வைகள் 
உயர்வானவைகள் 
உன்பாதைகள் 
பக்குவப்படுத்தப்  பட்டவைகள் 
நானும்  தொடர்கிறேன் 
அன்பனே .   




                                    தமிழன்புடன்  மாலதி ..... 

 
 









 




Saturday 21 January 2012

தோற்றுவாய்

    இப்போதெல்லாம்  காதல் 
இலக்கியங்களைக்  கற்றதனால் 
தோற்றங் கொள்ளுவதில்லை .

மாறாக மட்டரக 
திரைப்படங்களின்  வழி 
காதல்  பெறப்படுகிறது .

மட்டரக  காதல்
மாவீரர்களைத்  தோற்றங்கொள்ளச்  
செய்வதில்லை .

இலக்கியக்  காதல் 
வீரத்தையும்  வாழ்வியலையும் 
படம் பிடித்துகாட்டி 
பாடமாக  விளங்கியது . 

திரைப்படங்களுக்கு 
அங்கன மெல்லாம் 
இருக்க  தேவையில்லை .

காதல்  வெறும் 
இன  கவர்ச்சி
மட்டுமே  கவர்ச்சியை 
காட்டும்  காசுபார்க்கும் .

விரைந்தொட்டும் பசைபோல 
இன கவர்ச்சி  விரைந்துகூடி 
 விரைந்து  பிரியும் .

கற்று கொடுக்காமை 
இந்த குமுகத்தின்பிழை  
ஊடலும்  கூடலும் 
இயல்புதான்  எனினும் 
இப்போதைய  காதல் 
முறிவை  நோக்கியே 
முன்னே  நகருகிறது .

ஒன்று பட்டு  வாழ்வதற்க்கான 
சூழலை  கண்டறிவோம் 

பிணக்குகளை  புறந்தள்ளி 
ஒற்றுமைக்கான  காரணங்களை 
கண்டறிந்து  கற்ப்போம் 
புதிய  காதல்பாடம்.

Saturday 14 January 2012

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

இருட்டு உடையட்டும்
விடியல் பிறக்கட்டும்
தரணி போற்றிடும்
தமிழர் வாழ்வில்.


திசைமாறி உதிக்கும்
ஆதவன் திக்கெட்டும் 
தீக்கதிர் பறப்பட்டும்
போலிகள் வீழ்ந்துமடியட்டும் .


அறியாமை இருள்நீங்கி 
பகலவன் தோன்றட்டும் 
ஆர்பரிக்கும் கடலலையாய்
தமிழர்கலைகள் விண்ணைமுட்டட்டும்.


தமிழன்நீடுதுயில் நீங்கி
நிலம் கிழித்து
காட்டை வளமாக்கி 
பொன்னை விளைக்கட்டும்.


கன்நெலும் செந்நெலும் 
காடெலாம்கழனியெலாம் விளைந்து
வீடெலாம் வீதியெலாம்            
நெற்கதிர் குவியட்டும்.


கரும்புபாகாகி கட்டியாகி
நம்குருதியாகி எலும்பாகி 
தோள்கள் வலிமைபெறட்டும் 
பகைவன் ஒடிஒழியட்டும் .


நம்பழமையும் அறிவியலும் 
வானவியலும் கட்டிடக்கலைகளும்
தமிழர் மருத்துவமும் ஆனஎல்லாக் 
கலைகளும் வளம்பெறட்டும்.


சாதிமதப் பித்தொழிந்து
சமத்துவம் உதிக்கட்டும் 
உலகச்சமாதானம் தொன்றட்டுமென 
இத்தமிழர் திருநாளில் 
வணங்கி வானமாகிவாழ்த்துகிறேன் . 


கரும்பு வெல்லம் குருதியைப் பெருக்கும் எலும்பை வளர்க்கும் வளப்படுத்தும் . 


அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள் .     




    .... என்றும் மாலதி                                             

Sunday 8 January 2012

கலைகளைக் காப்போம்

 

தரணி போற்றிடும்
தமிழர்க்  கலைகள்
விண்ணை  முட்டி
உயர்ந்து  நின்றவை

கட்டிடக் கலைகள்
வானவியல் கலைகள்
அன்றே நம்மவர்
ஆய்ந்து  சொன்ன
அணுவைப்  பிளந்திடும்
அறிவியல்  படைப்புகள் .

அறிவில்  வேர்பிடித்து
அறிவியியலில் உயர்ந்த
தமிழரின்
சித்த மருத்துவம் ஆக
ஆய கலைகள்
அறுபத்து  நான்கும்
விண்ணை முட்ட
உயர்ந்து  நின்றவை .

நிலைத்தது நின்ற 
நீரியல்  மேலாண்மை
கனவாய் மாறிய
வேளாண் கலைகள்

சிந்து வெளியில்
சிறந்  தோங்கிய
வாழ்வியல்  முறைகள் .

எண்ணற்ற  கலைகள்
முடமாகிப்  போனது
இதனல்  தமிழர்
வாழ்வும்விடை தெரியமால்
போனது .

திக்கு  தெரியாகாட்டில்
வழிதேடிப் பயணிக்கிறான் .
கண்களைக்  கட்டிக்
காட்டில் பயணிக்கிறான்
விட்டில் பூச்சியாய்
வீழ்ந்து  மடிகிறான் .

நம் கலைகளை
வளர்க்க நாமும்
உயர்வோம்  நாடும்
உயரும் .
நம்கலைகளை  வளர்த்து
விண்ணை முட்டி
உயர்ந்து  நிற்ப்போம் .