இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 18 May 2013

பிழை.... செய்தேன்

 நீ  ஒரு கோணத்தில்
சிந்தித்து பேசினாய் .

நான் ஒரு கோணத்தில் புரிந்து
கொண்டேன் .
 உன்கோனத்தை
எனக்கு புரிய வைக்கவில்லை.

எல்லாமே  புரிதல் இன்மையால்
வந்த பிழை .

உன்கோணம் உனக்கு சரியென
தோன்றும் .

புரியாமையால்
எனக்கு தவறென படும் .

இதுதான் நமக்குள் காட்சி
பிழையாகிப் போனது .

சரித்திரத்திக்கும்
தரித்திரத்திற்கும்
வேறுபாடு?

பிழை செய்தேன்
மன்னித்துவிடு

சராசரியாக
இருந்தேன்
மாறுபட்டவன்
மாறுபட்டு சிந்தித்தேன்
செய்தமை தவறென
உணர்ந்தேன்
மனித்துவிடு ...

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

மாறுபட்டவன்
மாறுபட்டு சிந்தித்தேன்

மாற்றம் ஒன்றே மாறாத்தௌ ..!

இளமதி said...

புரிதலும் பிரிதலும் உரிமையால் வருவதே
முறிவென எண்ணி வருந்தலாமோ தோழி!...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

மன்னிக்கும் நன்மனம் வாய்க்குமெனில் நம்வாழ்வில்
என்றைக்கும் துன்பம் இலை!

கவிஞா் கி. பாரதிதாசன்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சொல்லாடல்...

தொடர வாழ்த்துக்கள்...

(உன்கோனத்தை - உன்கோணத்தை
மனித்துவிடு - மன்னித்துவிடு)

மகேந்திரன் said...

மரபுப் பிழையற்ற
இடமாறு தோற்றப்பிழைகள்
காலத்தால் கழுவப்படும்...
சிறப்பான சிந்தனை சகோதரி...

ராஜி said...

பிரிவுதான் அனபை மேலும் வளர்க்கும். கலங்காதே தங்கச்சி

Joker said...

உன்கோனத்தை (கோணம் கோணலாகிப்போனது )
ஒரு கால், காலிலாமல் போனால் கேனமாகிப் போகுமே.
மனித்துவிடு.(மன்னிப்பும் மரித்துப்போனது )
எவ்வளவு கவிதை நயம்.!.
அர்த்தமுள்ள எழுத்துப்பிழை.
Modern Art போல பார்ப்பவர்கள் எண்ணத்தை பொறுத்தது.
உங்கள் எழுத்துக்கள்.
எத்தனை கூர் முனைகள்.
வாழ்த்துக்கள்.

Joker said...

கவிதை எழுதுவது,
(தன் மன உணர்வுகளை
சிறந்த முறையில் வெளிப்படுத்துவது.)
(அதுவும் பொக்கிஷமான தமிழில்)
எல்லோராலும் செய்ய இயலாத காரியம்.
உங்கள் கவிதை நடை மிகவும் அருமை.
தொடருங்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.